பாமினி அவர்களின் பெண்ணே நீபேசவாவுக்கான கருத்து

மிகவும் அழகிய நேர்காணல். வழமை போலவே குணாலினின் அழகிய வினாக்களுக்கு கோபிகை கோபி தந்த பதில்கள் யதார்த்தத்தைப் பேசுவதாக இருந்தது. கணவரை இழந்த பெண் சிரிப்பதை நிறுத்திய கதை மனதை வலிக்க வைத்த போதும் , யதார்த்தத்தை உணர்ந்தேன். மகனும் அதனை விரும்பவில்லை என்றது இளம் தலமுறையினரும் அதே பாதையில் நடக்கிறார்களோ என்ற எண்ணத்தைத் தந்தது. மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்காக உதவும் கோபி கோபிகை அவர்களும் குணாலினியின் ஒழிந்திருக்கும் பெண்களும் வெளியே வர வேண்டும் என்ற கோரிக்கையும் மனதை தொட்டு என்னை உற்சாகப்படுத்தியது. பெண்கள் தமது பலத்தை அறிந்தால் பல சிக்கல்கள் தீர்ந்து விடும். அடுத்தவர் என்ன கூறுவார் என்ற பயம் , பலருக்கு மாபெரும் தடைக் கல்லாக உள்ளது. அந்த பயத்தில் இருந்து விலகவும், பெண்ணை தியாகியாக வர்ணித்து பயன்படுத்தும், சுயநல வலையில் இருந்தும் பெண்கள் விடுபட வேண்டும். அதற்கு STS தமிழ் தொலைக்காட்சியின் பெண்ணே நீ பேச வா என்ற நிகழ்ச்சி மாபெரும் உதவியாக இருப்பது மனதை நிறைவு கொள்ள வைக்கிறது. அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்


️
